மாணவர்களுக்கு இலவச பால் வழங்க தீர்மானம்!

நாடாளுமன்றத்திற்கு வரும் மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணையை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 500 குழந்தைகளுக்கு ஒரு குவளை பால் இலவசமாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (08) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.